தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் சிம்பு கதாநாயகனாக அறிமுகம் ஆனார். தமிழக அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு சிம்புவுக்கு கலைமாமணி விருதை கொடுத்து கௌரவித்தது.

இதனையடுத்து கோவில் குத்து, மன்மதன், சரவணா, சிலம்பாட்டம், விண்ணை தாண்டி வருவாயா உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் சிம்பு நடித்துள்ளார். சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. முன்னதாக மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் சிம்பு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க சிம்பு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை கமலஹாசன் தயாரிக்கிறார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இணையத்தில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அது என்னவென்றால் விஷால் நடித்து ஹிட்டான ஒரு படத்தில் நடிப்பதற்கு முதலில் சிம்புவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அதன் பிறகு தான் அந்த சூப்பர் ஹிட் படத்தில் விஷால் நடித்துள்ளார். அது என்ன படம் என்றால் தருண் கோபி இயக்கத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திமிரு திரைப்படம் இந்த படத்தில் விஷால், ரீமாசென், சிரேயா ரெட்டி உள்ளிட்ட பல நடித்தனர். இந்த செய்தி தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்த சிம்பு ரசிகர்கள் திமிரு படத்தில் சிம்பு நடித்திருந்தால் படம் இன்னும் வேற லெவலில் இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

