Connect with us

மீனா முத்துவின் முடிவை கேட்டு ஆடிப்போன ரோகிணியின் அம்மா… பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை…

CINEMA

மீனா முத்துவின் முடிவை கேட்டு ஆடிப்போன ரோகிணியின் அம்மா… பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை…

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் கிரிஷை சந்திக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது என்னடா புது பிரச்சனை என்று ரோகினி அதிர்ச்சிக்கு உள்ளாகிறாள். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனிக் காண்போம்.

   

சுருதி ரவி இருவரும் ரவி செய்த பர்பியை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறனர். அப்போது மீனா வருகிறாள். வந்து சாப்பிட்டு பார்க்கிறாள். ரொம்ப நல்லா இருக்குது அப்படின்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஜயா வந்தவுடன் மீனாவும் சுருதியும் சண்டை போடுவது போல் நடித்துக் கொள்கின்றனர். உடனே விஜயா சந்தோஷம் அடைந்து அவளும் பர்பிய சாப்பிட்டு விட்டு இப்பதான் சுருதி கரெக்டா இருக்க அப்படின்னு சொல்லிவிட்டு வெளியே கிளம்பி விடுகிறாள்.

   

உடனே ரவி ஐயோ நீங்க ரெண்டு பேரும் என்னம்மா பெர்பார்மன்ஸ் பண்றீங்க அப்படின்னு சொல்லி கலாய்க்கிறார். வேற என்ன பண்றது ரவி ஆண்ட்டியா இப்படித்தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும் அப்படின்னு சொல்கிறாள். அடுத்ததாக ரோகிணி அவங்க அம்மாவுக்கு போன் செய்து முத்துவும் மீனாவும் கிருஷை பார்க்க வரதா சொல்றாங்க நான் சொல்றத மட்டும் நீ செய் அப்படின்னு சொல்லிட்டு பக்கத்து தெருவுல சரிகா அக்கா இருக்காங்க அவங்க வீட்டுக்கு நீ கிரிஷை அனுப்பிடு. அவங்க வந்தா எப்படியாவது பேசி சமாளிச்சு அனுப்பி விடு அப்படின்னு சொல்கிறாள் ரோகிணி.

 

முத்துவும் மீனாவும் ரோகிணி அம்மாவின் வீட்டிற்கு கிருஷை பார்ப்பதற்காக செல்கின்றனர். தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கொடுக்கின்றனர். உங்களுக்கு உடம்பு முடியலன்னு எங்களுக்கு தெரியாதும்மா நீங்க எனக்கு போன் பண்ணி இருந்தா நாங்க தான் வந்திருப்போமே ஹெல்ப் பண்றதுக்கு அப்படின்னு சொல்கிறார்கள். கிரிஷோட அம்மா வெளிநாட்டிலிருந்து எப்ப வராங்க அப்படின்னு கேக்குறாங்க. அதற்கு ரோகிணி அம்மா அவ கொஞ்சம் நாளில் வந்துருவா நான் பக்கத்து தெருவுல சொந்தக்காரங்க வீட்ல கிரிஷை விட்டுருக்கேன் என்னால பாத்துக்க முடியல அப்படின்னு சொல்கிறார்.

உடனே முத்தமும் மீனாவும் இதுதான் சரியான தருணம் என்று அம்மா நாங்க ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். கிரிஷை நாங்க தத்தெடுத்து வளர்க்கறதா இருக்கோம். உங்களுக்கு உடம்பு முடியல அவன் எடத்துல இருந்து அவன் மனநிலையை யோசிச்சு பாருங்க. அவன் எதிர்காலம் என்ன ஆகும் அவன் ரொம்ப பாசம் வச்சி இருக்க ஒரு பையன். எங்கள மாமா அத்தைன்னு அவ்வளவு உரிமையா கூப்பிடுறான். அடுத்ததாக அம்மா அப்பா அப்படின்னு கூப்பிடனும் நாங்க ஆசைப்படுறோம். என்னைக்குமே க்ரிஷ் தான் எங்களுக்கு முதல் குழந்தை. அதனால அவனை தத்தெடுத்து நாங்க வளர்க்கலாம்னு இருக்கோம். அவனோட எதிர்காலத்துக்காக தான் நாங்க யோசிச்சோம் அப்படின்னு சொல்லி அவங்களோட முடிவே சொல்கின்றனர். இதைக் கேட்ட ரோகினி அம்மா ஒரு நிமிஷம் ஆடிப் போய்விடுகிறார். பின்னர் திடு திடுப்புன்னு சொல்லிட்டீங்க எனக்கு என்ன சொல்றேன்னு தெரியல எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க அப்படின்னு சொல்லி முத்து மீனாவை அனுப்பிவிடுகிறார்.

உடனே அவங்க சென்ற உடனே ரோகினிக்கு போன் செய்து நடந்தது எல்லாம் கூறுகிறார் ரோகிணி அம்மா. உடனே ரோகினிக்கு கோபம் தலைக்கேறுகிறது. அதெல்லாம் ஒன்னும் வேண்டாமா தத்து கொடுக்க முடியாது அப்படின்னு நீ அடிச்சு பேசிருனு ரோகினி சொல்கிறார். உடனே ரோகிணி அம்மா கோபத்தோடு உனக்கு என்ன ஆச்சு ரோகினி கிரிஷோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னு யோசிக்கிறேன். நீ தான் அவனை சரியா பாத்துக்காம உன் வாழ்க்கை தான் முக்கியம்னு நீ போயிட்ட. அவன சின்ன வயசுல இருந்து அவனை சாப்பாடு கொடுத்து பார்த்து வளர்த்தது நான் அவன் எதிர்காலம் எப்படி இருக்கணும்னு நான் யோசிக்க தான் செய்வேன் அப்படின்னு கத்துகிறாள். உடனே ரோகிணி என்னம்மா உனக்கு க்ரிஷ் பாரமா இருக்கானா அதனால அவனை தள்ளிவிடலாம் என்று நீ பாக்குறியா அப்படின்னு ரோகிணி கேட்கிறாள். அதெல்லாம் இல்ல ரோகிணி அவனுடைய எதிர்காலம் நல்லா இருக்கணும் அந்த வீட்ல அவன் வளர்ந்தான்னா உன் கண்ணு முன்னாடி தான அவன் வளர போறான் எனக்கு இது நல்ல முடிவா தான் தெரியுது அப்படின்னு சொல்கிறார். உடனே ரோகினி நீ அப்படியெல்லாம் சொல்லாதம்மா நான் சொல்றத மட்டும் நீ செய் அவன் கிட்ட தத்து கொடுக்க முடியாதுன்னு சொல்லு அதுக்கு மேல நீ ஏதாவது பண்ணினா நான் சும்மா இருக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு போனை வைக்கிறாள். அதோட இன்றைய எபிசோடு முடிந்தது.

More in CINEMA

To Top