CINEMA
அந்த படத்தில் நான் நடிச்சிருக்கவே கூடாது.. அதனாலதான் இப்ப வரைக்கும்.. நடிகர் அருள்நிதி ஓபன் டாக்..!!
பிரபல நடிகர் ஆன அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க தமிழரசின் மகனும் ஆவார். அருள்நிதி மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாது வசனம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அருநிதி நடிப்பில் டிமாண்டி காலணி 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் அருள்நிதி அளித்த ஒரு பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்கள் தாத்தா இந்த படத்தை பார்த்திருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்த படம் உண்டா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அருள்நிதி கழுவேத்தி மூர்க்கன் படத்தை என் தாத்தா பார்த்து இருக்கணும். அதுல நிறைய பேர் நிறைய கருத்து என்னிடம் சொன்னார்கள். அவர் என்ன கருத்து சொல்லி இருப்பாரு அப்படீங்கிறது ஒரு ஆர்வமாக இருந்திருக்கும்.
அந்த படத்துல ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கு. அவரோட கருத்து என்னன்னு தெரிஞ்சுக்கணும் ரொம்ப ஆசைப்படறேன். கண்டிப்பா அந்த படம் தாத்தாக்கு ரொம்ப புடிச்சி இருக்கும். கழுவேத்தி மூர்க்கன் படத்துல அந்த மீசைய பார்த்துட்டு நிறைய பேர் நல்லா இருக்குன்னு தான் சொன்னாங்க. எனக்கும் அது புடிச்சிருந்துச்சு. என்னோட மூன்று படம் பிரமோஷனுக்கு அந்த மீசையோட தான் போனேன் என கூறியுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு அருள்நிதி, பிரணிதா சுபாஷ், சந்தானம் ஆகியோர் நடிப்பில் உதயன் திரைப்படம் ரிலீஸ் ஆனது இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பேட்டியில் உதயன் திரைப்படத்தில் டபுள் ஆக்சன் ரோல் பண்ணியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அருள்நிதி அந்த படத்துல டபுள் ஆக்சன் பண்ணதால தான் அடுத்து வேறு எந்த படத்தலையும் டபுள் ஆக்சன் பண்ணவே இல்ல. அந்த டைம்ல அந்த படம் ஒர்க்கவுட் ஆகல. டைரக்டர் அதே படத்த வேறு யாரையாவது வச்சி எடுத்திருந்தா இன்னும் படம் பெட்டரா போய் இருக்கும் என கூறியுள்ளார்.