CINEMA
ரொம்ப பழைய கதை.. உண்மையான வில்லன் யுவன் சங்கர் ராஜா தான்.. ப்ளூ சட்டை வாயில் விழுந்த ‘GOAT’..!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் கோட் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது, கதையை முன்னதாகவே யூகித்து இருந்தாலும் படத்தின் விஷுவல் என்பது தரம் குறைந்து இருக்கிறது.
கென்யாவில் நடந்த சண்டையை பார்த்தால் உங்களால் பதிலே சொல்ல முடியாது. உளவுத்துறையில் வேலை பார்ப்பதாக கதாநாயகனை காண்பித்தாலும் அவர் உளவுத்துறையில் என்ன பணியாற்றினார் என்பது தெரியவில்லை. அடிப்படை அதிகாரி சிந்திப்பதை கூட உளவுத்துறை அதிகாரி சிந்திக்கவில்லை. இதை பார்க்கும் போது துப்பாக்கி படம் எவ்வளவோ மேல் என்று கூறலாம். மைக் மோகன் ஒரு சில காட்சிகளில் வருகிறார் போகிறார். படத்தில் இருக்கும் இரண்டு வில்லனுமே படுமோசம் தான்.
உண்மையிலேயே இந்த படத்திற்கு வில்லன் யுவன் சங்கர் ராஜா தான். ஒரு கிளைமாக்ஸில் பெரிய சண்டைக்கு எப்படி பிஜிஎம் போட வேண்டும். ஆனால் அங்கு கிரிக்கெட் கமெண்ட்ரி ஓடுகிறது. வில்லன் விஜயின் மகனை கடத்தி சென்று தந்தைக்கு எதிராகவே திருப்பி விடுகிறான். தளபதியும் இளைய தளபதியும் மோதும் போது இவர் அடிக்கிறார் என்று சந்தோசப்படவா? அவர் அடி வாங்குகிறார் என்று வருத்தப்படவா? என்பது தெரியவில்லை. தோனி தல என படத்தில் பேசி இருக்கிறார்கள். படத்தின் கதை பழசு. ஸ்கிரிப்ட் பக்கம் சிந்திக்காமல் தொழில்நுட்ப ரீதியாக சிந்தித்து அதை ஹார்ட் டிஸ்கில் போட்டு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என படம் எடுத்துள்ளனர்.
இந்த படத்தில் எதற்கு இரண்டு விஜய்? டீ ஏஜிங் தொழில்நுட்பத்திற்காக படத்தை மொத்தமாக சொதப்பி விட்டார்கள். விஜய்க்கு ஆதரவாக வெங்கட் பிரபுவின் பழைய நண்பர்களை வைத்து மிகப்பெரிய பழைய கதையை எதிர்பார்ப்பு இல்லாமல் இயக்குனர் எடுத்து வைத்துள்ளார். மொத்தமாக படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படத்தின் கதை ரொம்ப பழசு. திரைக்கதை மிக மோசம். டீ ஏஜிங் தான் வித்தியாசம். அதுதான் படத்திற்கு வினையாகவும் அமைந்தது. எப்படியோ படத்தை மூன்று மணி நேரம் எடுத்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் போய் படம் பார்ப்பது உங்கள் விருப்பம் என கூறியுள்ளார்.