ASTROLOGY
நாளை விநாயக சதுர்த்தி வழிபட வேண்டிய நல்ல நேரம் இதுதான்…. இதை மிஸ் பண்ணிடாதீங்க…
முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுபவர் விநாயகர் பெருமான். எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்னரே விநாயகர் பெருமாளை வணங்கிவிட்டு தான் அந்த காரியத்தை தொடங்குவர். அப்படி விநாயகர் பிறந்தநாள் தான் விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி எந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் களிமண்ணால் ஆன விநாயகரை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்து அதை கரைப்பார்கள். அப்படியே விநாயகர் சிலையை வாங்கி பூஜை செய்ய விரும்பினால் முந்தின நாளே வீட்டை சுத்தம் செய்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜைக்கு வாங்கி வர வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி பூஜையை செய்வதற்கு உகந்த நேரம் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரையும் 10.30 மணியிலிருந்து ஒரு மணி வரைக்கும் பூஜை செய்ய வேண்டும். ஏனென்றால் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை ராகு காலமும் 1:30 மணி முதல் மதியம் மூன்று வரை எமகண்டமும் வருவதால் அந்த நேரத்தில் வழிபடக்கூடாது.
மாலையில் பூஜை செய்ய விரும்புவோர் 3 மணியிலிருந்து 5:30 மணிக்குள்ளாக பூஜை செய்து விடுவது சிறப்பு. வீட்டில் விநாயகருக்கு பிடித்தமான உணவுகளான கொழுக்கட்டை, சுண்டல், பால், தயிர், தேன், அவல், பொரி, லட்டு போன்றவற்றை வைக்கலாம். அனைத்தும் வைக்க முடியாதவர்கள் கொழுக்கட்டை அல்லது சுண்டல் மட்டும் வைத்தே பூஜை செய்யலாம். மேலும் இது தவிர விளாம்பழம், மாதுளை, வாழைப்பழம், கொய்யாப்பழம் ஆகியவற்றை விநாயகருக்கு படைக்க வேண்டும். விநாயகருக்கு மிகவும் உகந்த மாலையாக கருதப்படும் எருக்கம் பூவால் ஆன மாலையை அணிவித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். அதே போல் விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல்லையும் பூஜையில் வைப்பது சிறப்பானது ஆகும்.
இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான இந்துக்களின் பண்டிகைகள் ஒன்று விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த நாளில் விநாயகரை வணங்கும்போது நமக்கு எல்லா வளமும், நோய் நொடி இல்லா வாழ்வும் சகல ஐஸ்வர்யமும் நமக்கு கிடைக்கும்.