CINEMA
லேடி சூப்பர் ஸ்டாருக்கே டப் கொடுக்கும் குட்டி நயன்தாரா.. இளசுகளை கிறங்க வைக்கும் கிளிக்ஸ்..!
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு கலக்கிக் கொண்டிருப்பவர் தான் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை அனிகா சுரேந்திரன். கௌதம் மேனன் கண்ணில் பட்டதால் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் அனிதாவுக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் குட்டி நயன்தாராவாக நடித்த அசத்தியிருந்தார். அடுத்ததாக ஜெயம் ரவியின் தங்கையாக மிருதன் திரைப்படத்தில் நடித்தார். அடுத்து அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாகவும் நடித்தார். குறிப்பாக இந்த படத்தில் கண்ணான கண்ணே பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.
அதன் பிறகு மாமனிதன் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் டீன் ஏஜ் வயதை எட்டிய அனிகாவுக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதன்படி தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்தார். முதல் திரைப்படத்திலேயே முத்த காட்சிகள் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்தார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான ஆடை அணிந்து அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி தற்போது புடவையில் க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இளசுகளை கிரங்க வைத்துள்ளது.