CINEMA
ஜெயிலர் படத்தில் நெல்சன் செய்த தவறு.. GOAT படத்தில் சரி பண்ணிய வெங்கட் பிரபு.. தளபதி நீங்க GREAT..!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். கோட் படத்தின் முதல் பாதியும், 2-ஆம் பாதியும் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கோட் திரைப்படத்தில் நடித்துள்ளது. கடந்த கடந்த 2023-ஆம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கும். நெல்சன் தேவையில்லாமல் இத்தனை கதாபாத்திரங்களை கொண்டு வந்திருக்கிறாரே.
அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என விமர்சனங்கள் இருந்தது. ஆனால் விஜயின் கோட் திரைப்படத்தைப் பொறுத்தவரை வெங்கட் பிரபு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் என அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சியில் சிறப்பாக நடித்துள்ளனர். வெங்கட் பிரபு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.