சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மீனா தனக்கு கிடைத்த ஆர்டரை வெற்றிகரமாக முடித்துவிட்டார். அதற்காக அவருக்கு பரிசளிக்கும் விதமாக மீனாவுக்கு என்று தனியா அக்கவுண்ட் செக் புக் ஏடிஎம் கார்டு என அனைத்தையும் மொத்த ஏற்பாடு செய்து கொடுக்கிறார் முத்து. அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் செக் புக் வாங்கியவுடன் மீனா முதலாவதாக ரவி சுருதியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் செக்கை கொடுக்கிறார். இதை மனோஜ் ஒரு பக்கம் நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக அண்ணாமலையை வேலை செய்யும் இடத்திற்கு கொண்டு விடுவதற்காக முத்து செல்கிறார்.
அங்கு ரோகினியின் அம்மாவையும் கிறிஷையையும் முத்து பார்த்து விடுகிறார். ரோகிணியின் அம்மா வசமா மாட்டிக்கிட்டோமே என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டே இருக்கிறார். அப்போது முத்து என்ன அம்மா இவ்ளோ நாளா எங்க காணாம போயிட்டீங்க என்று கேட்கிறார். அதற்கு ரோகினியின் அம்மா என் பொண்ணு இங்கேயே வந்துவிட்டா அதனால் தான் நாங்க இடம் மாதிரி வந்துட்டோம் என்று கூறி சமாளிக்கிறார். அதற்கடுத்ததாக கிரிஷ்க்கு சாக்லேட் வாங்கி தருவதாக முத்து அழைத்து செல்கிறார்.
மறுபக்கம் மனோஜின் ஷோரூமில் ஜிஎஸ்டிக்கான நோட்டீஸ் வந்திருப்பதை பார்த்து ரோகிணி மனோஜிடம் சத்தம் போடுகிறார். என்ன ஜிஎஸ்டி கட்டாமல் இருக்க இதை கட்டல அப்டினா நமக்கு பிசினஸ் அவ்வளவுதான். சீக்கிரமா கட்டணும் இப்போதைக்கு எக்ஸ்க்யூஸ் போடுன்னு சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதிகாரிகள் வந்து விடுகிறார்கள். வந்து ஜிஎஸ்டி கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பினோம் நீங்க கட்டவே இல்ல நாங்க கடையை சீல் வைக்க போறோம் என்று கூறுகிறார்கள்.
ரோகிணி கஸ்டமர் எல்லாம் இருக்காங்க சார் நாங்க இப்பதான் பிசினஸ் ஆரம்பித்திருக்கிறோம் நீங்கள் சீல் வச்சிட்டீங்கன்னா பிசினஸ் இல்லாம போயிடும் தயவு செஞ்சு எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நாங்க அதுக்குள்ள ஜிஎஸ்டி கட்டிறோம் ஒரு நாலு மணி நேரம் டைம் கொடுங்க என்று கேட்கிறார். அதிகாரிகளும் சரி என்று கூறி போய் உள்ளே அமர்ந்து கொள்கின்றார்கள். அப்போது அந்த நேரத்தில் ரோகினி தன் அம்மாவுக்கு போன் செய்கிறார். அப்போது அவர் போன் எடுத்ததும் ரோகிணியின் அம்மா நா முத்துக்கு கிட்ட மாட்டிகிட்டேன் என்று கூறுகிறார். சரி எப்படியாவது சமாளிச்சு அங்கிருந்து வந்து எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது நகையை எடுத்துட்டு வா என்று கூறி அதை வைத்து ஜிஎஸ்டி கட்டி விடுகிறார். மனோஜ் ரோகினி இடம் நீ எனக்கு கிடைத்தது ரொம்ப பொக்கிஷம் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…