#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் க்ரிஷ் வீட்டிற்கு சென்று அவனை தத்தெடுப்பது சம்பந்தமாக ரோகினி அம்மாவிடம் பேசுகின்றனர். ரோகினியின் அம்மாவும் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க என்று சொல்லி அவர்களை அனுப்பி விடுகின்றனர். இதை அறிந்த ரோகினி இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறாள் அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.
இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வருகின்றனர். அங்கு அண்ணாமலை அவர்களை கூப்பிட்டு என்னடா கிரஷ் வீட்டுக்கு போனீங்களா அவங்களை பார்த்தீர்களா என்று கேட்கிறார். உடனே நடந்ததை எல்லாம் கூறுகின்றனர். மீனா க்ரிஷ் பாட்டிக்கு ரொம்ப உடம்பு முடியல. அவனை பாத்துக்க முடியல அப்படின்னு சொல்கிறாள். உடனே முத்து அவங்க பொண்ணை நினைத்தால் எனக்கு கோபமா வருது இப்படி பெத்த அம்மாவையும் பிள்ளையும் விட்டுட்டு பணம் என்ன அவ்வளவு முக்கியமா அவள நல்லவளா இருக்க வாய்ப்பே கிடையாது சின்ன வயசுல நான் எப்படி கஷ்டப்பட்டனோ அம்மா பாசம் இல்லாமல் அதே மாதிரி தான் க்ரிஷ் கஷ்டப்படுறான்பா. அதனால நாங்க தத்தெடுத்துக்கலாம் என்று முடிவு பண்ணி அவங்க பாட்டி கிட்ட கேட்டோம். அவங்க யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க அப்படின்னு சொல்கிறான்.
உடனே அண்ணாமலை எதனால் யோசிச்சு செய்ங்க அப்படின்னு சொல்றாரு. இவங்க பேசுறது எல்லாம் ரூம் கதவுக்கு பின்னாடி ரோகினி ஒட்டு கேட்கிறாள். கிரிஷை தத்தெடுக்க விடக்கூடாது என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறாள். அந்த நேரத்தில் விஜயா அங்கு வருகிறாள். அப்போ விஜயாவிடம் ரோகிணி முத்துவையும் மீனாவையும் மாட்டி விடுகிறாள். ஆன்ட்டி உங்களுக்கு தெரியாம அந்த கிரிஷை தத்தெடுக்கணும்னு பேசிட்டு இருக்காங்க அப்படின்னு ஏத்தி விடுகிறாள். உடனே விஜயா அப்படியா ரொம்ப நல்லதா போச்சு இதையே ஒரு பிரச்சனை ஆக்கி அவங்க ரெண்டு பேரையும் நான் வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவேன். எனக்கு இதுல ஒரு பிரச்சனையும் இல்ல. அவளுக்கு உடம்புல ஏதோ குறை குழந்தை பெத்துக்க முடியல அதான் தத்தெடுத்தான் அப்படின்னு சொல்லி நான் வெளியே அனுப்பிடுவேன் அப்படின்னு சந்தோசமா போய் விடுகிறாள். இனி ஆன்ட்டியை நம்புனா வேலைக்கு ஆகாது நம்ம தான் ஏதாவது செய்யணும் அப்படின்னு ரோகினி முடிவு செய்கிறாள்.
மறுநாள் சிட்டிக்கு வெளியே இருக்கிற ஒரு இடத்துக்கு தன் பிரிண்ட் வித்யாவுடன் வருகிறாள். வித்யாவிடம் இங்க இருக்கிற ஸ்கூல்ல தான் கிரிஷை சேர்க்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் வித்யா. கிரிஷை முத்து மீனா தத்தெடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க. என் வீட்டுக்கு க்ரிஷ் வந்தான்னா அவன் ஏதாவது சூழ்நிலை நான் அம்மான்னு கூப்பிட்டுட்டான்னா எனக்கு அது பிரச்சினையாகிடும் அப்படின்னு சொல்கிறார் ரோகிணி. வித்யா இது நான் எனக்கு அது நல்லா தான் தோணுது நீ தான் வேண்டாம்னு சொல்ற அப்படின்னு சொல்கிறாள்.
உடனே ரோகினி சிட்டிக்குள்ள இருந்தா மீனா பூ கட்ட போறேன் முத்து கேப் ஓட்டுறேன்னு க்ரிஷ் மாட்டிக்குவான். சிட்டிக்கு வெளியே இங்க வந்துட்டாங்க அப்படினா எனக்கு பிரச்சனை இருக்காது அப்படின்னு சொல்லி ஸ்கூல்ல போய் ஃபீஸ் எல்லாம் விசாரிச்சு எல்லாம் பேசி முடிச்சுட்டு வராங்க. வித்யா ரோகினி நல்லா யோசிச்சு முடிவு பண்ணு இங்க பீஸ் எல்லாம் ரொம்ப அதிகமா இருக்குது அப்படின்னு சொல்கிறார். எல்லாம் நான் சமாளிச்சுக்குவேன் அப்படின்னு சொல்லிட்டு ரோகிணி அவ அம்மாவிற்கு கால் செய்கிறாள். அவள் அம்மாவிடம் நடந்ததை கூறி எங்க ஸ்கூல்ல எல்லாம் பேசிட்டு அடுத்த வாரத்திலேயே உன்னையும் கிரிஷையும் நான் எங்க கூட்டிட்டு வந்துடறேன் கவலைப்படாதீங்க அப்படின்னு சொல்கிறார் அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…