CINEMA
மனோஜிடம் வசமாக மாட்டிக்கொண்ட ரோகிணி… சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…
சிறகடிக்க ஆசை தொடரில் நேற்றைய எபிசோடில் மனோஜிடம் ரோகிணி பொய் சொல்லி விடுகிறாள். அதை மனோஜ் கண்டுபிடித்து விடுகிறான். ஒரு பக்கம் முத்துவும் மீனாவும் செல்ல சண்டை கட்டிக் கொண்டிருக்கின்றனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.
இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் செல்லமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். பின்னர் மீனாவை சமாதானப்படுத்துவதற்காக முத்து அல்வா வாங்கிட்டு வந்து கொடுக்கிறான். அதற்குப் பின்னர் வீட்டில் மனோஜ் ரோகினிக்காக காத்திருக்கிறான். ரோகிணி உள்ளே வரும்போது எப்படி சமாளிக்கிறது, வசமா மாட்டிக்கிட்டோமே, ஒரு ஐடியா வச்சிருக்கோம் அந்த ஐடியா ஒர்க்கவுட் ஆகணும் அப்படின்னு நினைச்சுக்கிட்டே உள்ள போகிறாள்.
மனோஜ் ரொம்ப கோபமா இருக்கிறான். உள்ள போன ரோகிணி ஏன் மனோஜ் என் மேல கோவமா அப்படின்னு கேட்கிறாள். அதுக்கு மனோஜ் ஆமா இப்ப என்னங்கற நீ என்கிட்ட பொய் சொல்லிட்டு நீ எங்க போன அப்படின்னு கேட்கிறான். உடனே ரோகிணி புதுசா ரெடி பண்ணி வந்த கதையை சொல்ல ஆரம்பிக்கிறாள். கையில் கருங்காலி மாலையை எடுத்துக்கொண்டு நீ ஒரு சாமியார் சொன்ன இல்ல மனோஜ் அந்த சாமியார் கிட்ட போயி இந்த கருங்காலி மாலை வாங்கறதுக்காக தான் நான் போனேன். உனக்காக தான் நான் போன நமக்கு குழந்தை இருக்கணும் நம்ம பிசினஸ் எல்லாம் நல்லா இன்னும் பெரிய லெவல்ல வரணும் அப்படிங்கறதுக்காக தான் நான் போனேன் அப்படின்னு சொல்கிறாள்.
உடனே மனோஜ் இதுக்கு போறதா இருந்தா நீ என்கிட்ட சொல்லிக்கிட்டே போயிருக்கலாம். இதுக்கு எதுக்கு நீ பொய் சொல்லணும். இது பொய் சொல்ற அளவுக்கு பெரிய விஷயமே இல்லையே அப்படின்னு கேட்கிறான். அதற்கு ரோகிணி இல்ல மனோஜ் உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும் அப்படி என்று தான் நான் சொல்லாமல் போன அப்படின்னு சொல்கிறாள். உடனே அதையும் விடாமல் மனோஜ் உனக்கு தான் இந்த ஜோசியம் இந்த மாதிரி இதுல எல்லாம் உனக்கு தான் நம்பிக்கையே இல்லையே அப்புறம் இன்னைக்கு மட்டும் உனக்கு எப்படி புதுசா நம்பிக்கை வந்துச்சு நீ எப்படி போன அப்படின்னு கேட்கிறான்.
உடனே ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் அழ ஆரம்பித்து விடுகிறாள். என்ன மனோஜ் நீ போன தடவை சாமியார் கிட்ட போயிட்டு வந்து ஒன்னு ரெண்டு விஷயம் நடந்துச்சு அந்த நம்பிக்கையில் தான் நான் போயிட்டு வந்தேன் உனக்காக நான் இவ்வளவு தூரம் நான் போய் வாங்கிட்டு வந்தேன் நீ என்னையே சந்தேகப்படுறியா நான் வேற ஒரு யார் கூடயாவது தொடர்பு வச்சிருக்கேன் நீ நினைக்கிறாயா அப்படின்னு அழுக ஆரம்பிக்கிறாள். அழுக ஆரம்பிச்ச உடனே மனோஜ் சமாதானமாகி இல்ல அழாத ரோகிணி நான் உன்னை நம்புறேன் இனிமே எதுனாலும் சொல்லிட்டு போ அப்படின்னு சொல்கிறான். சொல்லிவிட்டு அந்த கருங்காலி மாலையை வாங்கி நான் இதை கொண்டு பூஜை ரூம்ல வச்சிக்கிறேன் நாளை காலைல நாம சாமி கும்பிட்டுட்டு போட்டுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு கொண்டு போய் வைக்க போய் விடுகிறான்.
உடனே ரோகிணி அப்பாடா தப்பிச்சுண்டா அப்படின்னு சொல்லிட்டு அவளோட பிரண்டு வித்யாவுக்கு போன் செய்கிறாள். வித்யாவிடம் நான் எப்படியோ சாமியார் பேர சொல்லி நான் சமாளிச்சுட்டேன். இனி நீ என்ன பாக்க வர்றதா இருந்தா நீ எனக்கு போன் பண்ணிட்டு தான் வரணும் அப்படின்னு சொல்லிவிடுகிறாள். பின்னர் மறுநாள் காலையில் பூஜை அறையில் மனோஜ் கருங்காலி மாலையை சாமி குண்டு போட்டு இருக்கறதை பார்த்து முத்து கிண்டல் செய்கிறான். உடனே அந்த நேரத்தில் ஊரிலிருந்து பாட்டியை அனுப்பி வச்சாங்க அப்படின்னு நாலு மூட்ட பச்ச வேர்க்கடலை வந்து இறங்குகிறது.
உடனே அதைப் பற்றி எல்லோரும் யார் யாருக்கு கொடுக்கணும் அப்படின்னு பேசிக் கொண்டிருக்கிறார்கள். மனோஜ் என்னோட கிளைண்டுக்கு எல்லாம் கொடுக்கணும் அப்படின்னு சொல்கிறான். ரவி நான் இதை வைத்து பர்பி செய்ய போறேன் அப்படின்னு சொல்கிறான். முத்து நானும் என்னோட செட்டில் இருக்க பசங்களுக்கு எல்லாம் கொடுக்கணும் அப்படின்னு சொல்கிறான். உடனே மீனா நானும் கொஞ்சம் வீட்டுக்கு கொடுக்கணும்ங்க கிருஷ்க்கு கொண்டு போய் முக்கியமா கொடுக்கணும் அப்படின்னு சொல்கிறாள். இதை கேட்ட உடனே ரோகினி ஷாக் ஆகிவிடுகிறாள். உடனே அண்ணாமலையும் விஜயாவும் சரி சரி இதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம் வாங்க எல்லாரும் சாப்பிடலாம் அப்படின்னு எல்லாரும் போய் விடுகிறார்கள். ரோகிணி மட்டும் தனியா நின்னு என்னடா இது புது பிரச்சனை மறுபடியும் ஆரம்பிக்குது அம்மாவும் கிருஷும் ஹாஸ்பிடல்ல இருக்காங்க மீனா வேற இப்படி கிருஷை பாக்க போறேன்னு சொல்கிறாளே அப்படின்னு நினைத்துக்கொண்டு அதிர்ச்சியில் இருக்கிறாள். அதோட இன்றைய எபிசோடு முடிந்தது.