‘மோகன்லால் சாதாரண ஆள் இல்ல.. அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?’- அப்போதே கணித்த மம்மூட்டி!

By vinoth on செப்டம்பர் 5, 2024

Spread the love

இந்திய சினிமா கண்ட மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் மோகன் லால். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் 3 முறை தேசிய விருது வென்றுள்ளார். எந்த பாத்திரம் கொடுத்தாலும் அந்த பாத்திரமாகவே மாறி நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

ஆனால் கடந்த சில வாரங்களாக அவர் மேல் சில சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்குத் தண்டனைப் பெற்றுத்தராமல் நடிகர் சங்கத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தது அவர் மேலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

   

இதுபற்றி பேசியுள்ள மோகன்லால் “நான் எந்த பவர் குரூப்பிலும் இல்லை. நான் மலையாள திரையுலகில் 47 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன். மலையாள நடிகர் சங்கமான அம்மா என்பது வர்த்தக யூனியன் கிடையாது. இது ஒரு குடும்பம். சங்கம் பற்றி அவதூறாக பேசாதீர்கள். மற்ற திரையுலகை காட்டிலும் மலையாள திரையுலகம் சிறப்பாகவே இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

   

ஆனால் மோகன்லாலும் இதுபோல பல லீலைகளில் ஈடுபட்டவர்தான் என்று அரசல்புரசலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கு உதாரணமாக ஒரு பொது நிகழ்ச்சியில் ஒரு நடிகை நடனமாடும் போது மோகன்லால் ஆபாசமான செய்கைகள் செய்தது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 

இந்நிலையில்தான் மோகன் லால் பற்றி மம்மூட்டி சொன்னதாக நடிகர் சீனிவாசன் பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. அதில் “அப்போது மோகன் லால் ஹீரோவாக நடிக்கவில்லை. வில்லனாகதான் நடித்து வந்தார். அப்போது மம்மூட்டி என்னிடம் ‘இவனை நாம் சாதாரணமாக நினைக்கக் கூடாது. அவன் சீக்கிரமே ஹீரோவாகி விடுவான். அது மட்டுமிலை அவன்தான் எனக்கு போட்டியாக வரப்போகிறான். கேரள சினிமாவின் முகத்தையே மாற்றப் போகிறான்” எனக் கூறியுள்ளார்.