பயங்கரம்! எட்டி உதைத்த மாணவன்.. வெடித்து சிதறிய ராக்கெட் லாஞ்சர்… என்ஜினீயரிங் மாணவர் துடிதுடித்து மரணம்… செங்கல்பட்டில் நேர்ந்த கோர விபத்து…!!!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் மத்திய மற்றும் மாநில போலீஸார், துணை ராணுவத்தினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் பாதுகாப்பு வீரர்கள் அடிக்கடி துப்பாக்கி சுடுதல், ராக்கெட் லாஞ்சர் மற்றும் வெடிகுண்டு வீசும் பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். இத்தகைய பயிற்சிகளின் போது வெடிக்காமல் சிதறி கிடக்கும் சில வெடிபொருட்கள் அந்த வனப்பகுதியிலேயே கிடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பொறியியல் பயின்று வரும் மாணவர்கள் 6 பேர், நேற்று மூன்று மோட்டார் சைக்கிள்களில் அனுமந்தபுரம் மலைப்பகுதிக்குச் சுற்றுலாவாகச் சென்றுள்ளனர். பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்த மாணவர்கள் மலை உச்சிக்குச் சென்றபோது, அங்கு வெடிக்காத நிலையில் கிடந்த ராக்கெட் லாஞ்சர் போன்ற ஒரு மர்மப் பொருளைக் கண்டுள்ளனர்.

அப்போது, மாணவர்களில் ஒருவரான பெங்களூருவைச் சேர்ந்த ஹீமான்யூ யாதவ் அந்தப் பொருளை எதிர்பாராதவிதமாக எட்டி உதைத்ததாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பொருள் அருகில் இருந்த பாறையில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் ஹீமான்யூ யாதவ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவருடன் இருந்த விஷால், ஆர்யன் சர்மா, கிருஷ்ணா மற்றும் நிக்காஷ் ஆகிய நான்கு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பெருமாள் கோவில் போலீஸார், உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மற்ற மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்கள் எதற்காக மலை உச்சிக்குச் சென்றார்கள் என்பது குறித்தும், வெடித்தது ராக்கெட் லாஞ்சரா அல்லது வெடிகுண்டா என்பது குறித்தும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago