கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும், ஹர்ஷிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி, 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், ஹர்ஷிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சச்சின் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த மார்ச் 30-ம் தேதி மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற ஹர்ஷிதா, வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், அவர் தனது காதலன் சச்சினுடன் ஓடியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் ஹர்ஷிதாவைத் தேடிக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் போது, “நான் கணவருடன் செல்ல மாட்டேன், காதலனுடன் தான் வாழ்வேன்” என ஹர்ஷிதா பிடிவாதமாக மறுத்துள்ளார். இருப்பினும், அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கெஞ்சியதால், மனம்மாறிய அவர் மீண்டும் கணவர் பிரகாசுடன் செல்லச் சம்மதித்தார். போலீசாரும் இருவரையும் சமாதானம் செய்து ஒன்றாக அனுப்பி வைத்தனர்.
ஆனால், கணவருடன் சென்ற மறுநாளே ஹர்ஷிதா மீண்டும் தனது காதலன் சச்சினுடன் வீட்டை விட்டு ஓடி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இரண்டாவது முறையாக வெளியேறிய அவர், இம்முறை காதலனுடன் காரில் அமர்ந்தபடியே மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…