இனி No டிராபிக் டென்ஷன்.. போக்குவரத்தை அசால்ட்டாக சரி செய்யும் ரோபோ… இணையத்தை கலக்கும் வீடியோ…!

By Srimathi on ஆவணி 16, 2025

Spread the love

உலக அளவில் “செயற்கை நுண்ணறிவு” வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய அதிசயங்களை உருவாக்கி வரும் நிலையில், மனித வடிவிலான ரோபோ சீனாவில் போக்குவரத்தை சரி செய்யும் காட்சி வலைத்தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் சாலையில் நடுவே, மனித வடிவிலான ரோபோ நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, பொதுமக்களை பாதுகாப்பாக சாலை கடக்க உதவி செய்கிறது.

உணவகங்கள், தொழிற்சாலைகள், திருமண நிகழ்வுகள் உள்பிட்ட பல்வேறு இடங்களில் ரோபோக்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்ற வரிசையில், சீனாவில் சாலைகளிலும் போக்குவரத்து காவலர் பணி செய்யும் இந்த ரோபோ, எதிர்காலத்தில் மனிதர்களின் பங்கை எப்படி மாற்றப் போகிறது என்ற கேள்வி எழும்பியுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பல்வேறு எதிர்வினை கருத்துகளையும் தூண்டியுள்ளது. “இன்னும் எத்தனை வேலைகளை ரோபோக்கள் கைப்பற்ற போகின்றது?” என்று ஒருவர் கேள்வி எழுப்ப, “போக்குவரத்து காவலர்களின் வேலை மிகவும் ஆபத்தாக உள்ளதோ!” என்று மற்றொருவர் தனது கருத்தை தெரிவித்தார்.