பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்.. நொடி பொழுதில் ஹீரோவாக மாறிய நபர்.. வைரலாகும் வீடியோ..!

By Divyamayakannan on ஆவணி 16, 2025

Spread the love

பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்ணை டாக்ஸி ஓட்டுநர் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து நொடிப் பொழுதில் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பெண்ணைக் காப்பாற்றிய உடன் போலீசார் விரைந்து வந்து அப்பெண்ணை மேலே இழுத்து பாதுகாத்தனர். அப்பெண்ணைப் பற்றிய எந்த ஒரு அடையாளமும் விவரங்களும் இதுவரை தெரிய வரவில்லை.

52 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து உள்ளனர். டாக்ஸி டிரைவரை ஹீரோ என்று புகழ்ந்தும் வருகிறார்கள். மனிதாபிமானத்தோடு செயல்பட்ட டாக்ஸி டிரைவருக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.