சொகுசு காரை வாங்கிய ரோபோ சங்கரின் மருமகன்.. விலை எவ்வளவு தெரியுமா..? ஒருவேளை மாமனார் சீதனமாக கொடுத்திருப்பாரோ..?

By Priya Ram on ஏப்ரல் 3, 2024

Spread the love

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் தனது நகைச்சுவை பேச்சாளும், நடிப்பாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு பலரையும் வியக்க வைத்தது.

   

பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் நடித்தார். மேலும் ஒரு சில படங்களில் இந்திரஜா கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்திரஜா தனது முறை மாமனை திருமணம் செய்ய போவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார். கடந்த வாரம் மதுரையில் வைத்து கார்த்திக் இந்த ராஜா தம்பதியினரின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் வெள்ளித்திரை சின்னத்திரை பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

   

 

பின்னர் சென்னையில் வைத்து பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. கார்த்திக் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் உண்மையிலேயே இவர் இந்த ராஜாவின் அம்மா பிரியங்காவின் உடன் பிறந்த சகோதரர் கிடையாது மாறாக பிரியங்கா தத்தி எடுத்து வளர்த்தவர் தான் கார்த்தி சிறு வயது ஆக இருக்கும் போது அவரது தந்தை இறந்துவிட்டார்.

சொந்த பந்தங்கள் கைவிட்ட பிறகு தாயுடன் சிரமப்பட்ட கார்த்திக் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியுள்ளார். இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கார்த்திக் இந்திராஜா தம்பதியினர் Honda Elevate என்ற புதிய காரை வாங்கியுள்ளனர். அந்த காரின் விலை 14 முதல் 20 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.