இந்த புகைப்படத்தில் தந்தை கையில் இருக்கும் PAN இந்திய நடிகை யார் தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

By Priya Ram

Published on:

பிரபல நடிகையான நயன்தாரா கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

   

நயன்தாரா சந்திரமுகி, வல்லவன், யாரடி நீ மோகினி, வில்லு, ராஜா ராணி, தனி ஒருவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நயன் விக்கி தம்பதியினர் தங்களது மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்கள்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நயன்தாராவின் தந்தை இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். நடிகர் நடிகைகள் சிறுவயதில் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நயன்தாராவின் போட்டோ வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram