‘அவனுக்கு இப்படி ஒருநிலை வந்திருக்க கூடாது’.. மனக்குமுறலில் டேனியல் பாலாஜியின் அம்மா..

By Deepika

Updated on:

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. தமிழ், மலையாளம், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த இவர், சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதாகும் இவர் திடீரென இப்படி மாரடைப்பால் இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இவர் நடிகர் முரளியின் சகோதரர் ஆவார். பல திரையுலக பிரபலங்கள் இவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.

Daniel balaji mother about him

இந்தநிலையில் டேனியல் பாலாஜியின் தாய் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவன் பெயர் பாலாஜி, சினிமாவுக்காக டேனியல் பாலாஜி என பெயரை மாறிக் கொண்டான், அதுகுறித்து நான் கேட்கவில்லை, அதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கும். காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டான். சிறுவயதில் இருந்து கஷ்டம் தான். ஆனால் கடவுள் நம்பிக்கை இவனுக்கு அதிகம், யாருக்கும் கெடுதல் நினைக்காத மனசு அவனுக்கு.

   
Daniel Balaji

எப்போதும் கோவில்களுக்கு சென்று வருவான். இரண்டு தங்கைகள், ஒரு தம்பி இவர்கள் அனைவரையும் அவன் தான் பார்த்து கொண்டான். இவர்களை படிக்க வைத்தான். படிப்படியாக கஷ்டம் குறைந்தது. ஆனால் இப்படி இந்த வயதில் அவன் சென்றுவிட்டான். அவனுடைய ஜாதகத்தில் அவனுக்கு திருமண யோகமே இல்லை, அவனும் எனக்கு திருமணம் வேண்டாம் என கூறி விட்டான். யாருக்கும் என் நிலமை வரக்கூடாது, பிள்ளைகளின் இழப்பை கண்ணால் பார்ப்பது கொடுமை என கண்ணீர் மல்க கூறினார் டேனியல் பாலாஜியின் தாய்.

author avatar
Deepika