கார்த்திக்காக தற்கொலை வரை சென்ற முன்னணி நடிகை.. ஆனா அக்கா& தங்கை நடிகைகளை திருமணம் செய்துகொண்ட நவரச நாயகன்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் முத்துராமன். 60 களிலும் 70 களிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திறமையான நடிகராக இருந்தாலும் முத்துராமன் பெரும்பாலும் பல படங்களில் இரண்டாவது ஹீரோவாகவே நடித்தார்.  இவர் நடித்த காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, மூன்று தெய்வங்கள், சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் இன்றும் நினைவில் நிற்பவை.

அவரின் மகனாக கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் இந்த படம் ரிலீஸான போது முத்துராமன் உயிரோடு இல்லை. அலைகள் ஓய்வதில்லை மிகப்பெரிய ஹிட்டாக அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் கார்த்திக். அவருக்கு திருப்புமுனையாக வருஷம் 16, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் , உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார்.

   

தமிழ் சினிமாவில் 80களில் சாக்லேட் பாய் ஹீரோவாக வலம் வந்தார் கார்த்திக். அழகான தோற்றமும் கவர்ச்சிகரமான நடிப்பும்கொண்ட கார்த்திக்கை அப்போது அவரை விட சீனியர் நடிகை ஒருவர் காதலித்தாராம். அவருக்காக தற்கொலை வரை சென்றாராம். ஆனால் அவரைக் கண்டுகொள்ளாத கார்த்திக் தன்னுடன் சோலைக் குயில் என்ற படத்தில் நடித்த ராகினி என்ற நடிகையை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் நான்காண்டுகள் கழித்து 1992 ஆம் ஆண்டு ரதியையும் மணந்து கொண்டார். இரண்டு பேரோடும் இப்போது வரை சுமூகமாக வாழ்ந்து வருகிறார். கார்த்திக் ராகினி தம்பதிகளுக்கு கௌதம் கார்த்திக் மற்றும் கயான் கார்த்திக் என்ற இரு மகன்களும், கார்த்திக் ரதி தம்பதிகளுக்கு திரன் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். இதில் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.