பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் தனது மகளைச் சந்தித்த ராபர்ட் மாஸ்டர்…. ”ஐ லவ் மை டாட்டர்”… நெகிழ்ச்சி பதிவு இதோ…

By Begam

Published on:

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய குயின்சி மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும்  சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது ஐந்து சீசன்களை கடந்து தற்போது 6வது சீசனில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு விதமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சண்டைகளுக்கும் பிக் பாஸ் வீட்டில் பஞ்சமே இல்லை.

   

கொடுக்கப்பட்ட அனைத்து டாஸ்க்களிலும் போட்டியாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பான முறையில் அளித்து வருகின்றனர். இது இது ஒரு புறம் இருக்க குறைந்த வாக்குகளை பெற்று போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேறி கொண்டுள்ளனர். 21 போட்டியாளர்கள் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு போட்டியாளர் என வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் என உலகநாயகன் கூறியுள்ளார். அந்த வகையில் கடந்த வாரம்  பிக் பாஸ் வீட்டை விட்டு குயின்சி வெளியேறி இருந்தார். அவரை பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் தன் மகள் எனக் கூறி வந்தார். இந்நிலையில் குயின்சி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் சென்றதும் முதலில் ராபர்ட் மாஸ்டரை தான் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த புகைப்படத்தை ராபர்ட் மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ”ஐ லவ் மை டாட்டர்” என குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த பதிவு….