பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள ‘பிரேம் சிவா ஜுவல்லரி’ நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதுடன் கடை உரிமையாளரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளது.
வாடிக்கையாளர்களைப் போல பொலேரோ காரில் வந்து இறங்கிய அக்கும்பல், நகை வாங்குவது போல் நடித்துக் கடைக்குள் நுழைந்துள்ளது. பின்னர், நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றபோது, கடையின் உரிமையாளரான புன்னாராம் அவர்களைத் தைரியமாகத் தடுத்துப் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
https://twitter.com/nextminutenews7/status/2085576436140671461/video/1
காயமடைந்த உரிமையாளர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர், கடைக்குள் இருந்து 2 தோட்டாக்களைக் கைப்பற்றியதுடன் தடயவியல் குழுவின் உதவியுடன் ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். தப்பியோடிய கொள்ளையர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
