அடப்பாவிங்களா இப்படியும் இறங்கிட்டீங்களா..? காரில் கயிற்றை கட்டி ATM மிஷினை இழுத்த கொள்ளை கும்பல்… பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

By Soundarya on ஆவணி 6, 2025

Spread the love

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. அதன் அருகில் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் அங்கு நேற்று பணம் எடுக்க சென்றார். அப்போது ஏடிஎம் மிஷின் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்து வந்த காவல்துறை  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தார்கள். அப்போது கொள்ளை கும்பல் ஒன்று காரில் கயிறு கட்டி ஏடிஎம் இயந்திரத்தை இழுத்து பார்த்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

அதிகாலை நேற்று அதிகாலை 3 மணியளவில் நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் ஏடிஎம் மையத்திற்கு வந்து கார் மூலமாக கயிறு கட்டி இழுத்து உள்ளார்கள். ஆனால் அதனை பெயர்க்க முடியவில்லை. பின்பு மிஷினை உடைத்து அதில் உள்ள பணத்தை மட்டும் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்கள். ஆனால் அதிலும் அவர்கள் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் ஏடிஎம் மைய கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிய ஓடியது தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறையினர் இந்த கும்பலை தேடி வருகிறார்கள்.