பல ஆண்களை மயக்கி ஹோட்டலில் உல்லாசமாக இருந்த பெண்… காலையில் கண்விழித்த தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

By Divyamayakannan on ஆவணி 6, 2025

Spread the love

சென்னை ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் மணி (47). தொழிலதிபரான இவர் சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தன் தோழி தீபிகாவுடன் (24) தங்கியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது மது அருந்திவிட்டு போதையில் மணி தூங்கி விட்டாராம். காலையில் எழுந்து பார்த்தபோது அருகில் தீபிகாவை காணவில்லை. மணியின் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தங்க சங்கிலியும் திருட்டுப் போய் இருந்ததை கண்டு அதிர்ந்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சபரிதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளார். விசாரணையில் மணியின் தோழியான தீபிகா தான் நகையைத் திருடியது என்று தெரியவந்துள்ளது. தீபிகாவை போலீசார் தேடி வந்தனர் இந்நிலையில் தீபிகாவை குன்றத்தூரில் வைத்து நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். மணியிடம் திருடிய 10 பவுன் சங்கிலியை தீபிகா விற்று விட்டதாகவும் கூறியுள்ளார். விற்கப்பட்ட சங்கிலியை வாங்கியவர் உருக்கி தங்க கட்டியாக மாற்றிவிட்டார்  என்று தெரியவந்துள்ளது.

   

தீபிகாவின்  தந்தை சென்னை பெருநகர மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்க்கிறார். திருமணம் ஆகாத தீபிகா பெற்றோரை பிரிந்து தனி வீடு எடுத்து குன்றத்தூரில் வசித்து வந்துள்ளார் .இவருக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் மணியும் ஒருவராம். ஆண் நண்பர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பணம் ,நகைகளை எல்லாம் பறிக்கும் பழக்கம் உள்ளவராம் தீபிகா. உருக்கிய தங்க கட்டியை மீட்டு விசாரணை முடிந்தவுடன் தீபிகா சிறையில் அடைக்கப்படுவார்  என்று போலீசார் கூறியுள்ளனர்.