என்னப்பா இவன் தொல்லை கொடுக்கிறான்.? கர்ஜித்த சிங்கம்… மரண விளிம்பிற்கே சென்று திரும்பிய இளைஞர்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!

By Soundarya on ஆவணி 6, 2025

Spread the love

குஜராத் மாநிலம் பவ்நகரில் வாலிபர் ஒருவர் சிங்கம் பக்கத்தில் சென்று செல்போனில் வீடியோ எடுத்த பொழுது சிங்கம் கர்ஜித்துக் கொண்டு அவரை நோக்கி சீறிப்பாய முயற்சித்த வீடியோ வெளியாகிய நிலையில் அந்த வாலிபர் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். குஜராத் மாநிலம் பவ்நகரில் உள்ள அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தன்னுடைய இரையை மகிழ்ச்சியாக சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தது. அதை பார்த்த வாலிபர் சிங்கத்தின் அருகில் சென்று படம் பிடித்துள்ளார். சிங்கம்  இரையை சாப்பிட்டு அமர்வதை அந்த வாலிபர் அருகில் மெல்ல மெல்ல நடந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது அந்த வாலிபர் சிங்கத்தின் பார்வையில் பட்டார்.

என்னப்பா இவன் தொல்லை கொடுக்கிறான் என்று நினைத்த அந்த சிங்கம் கர்ஜித்துக்கொண்டே அவர் அருகில் வந்துள்ளது. ஆனால் அவர் பயந்து ஓடாமல் ஒவ்வொரு அடியாக பின்வாங்கிக் கொண்டே வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார். சில அடிகளில் முன்னேறி வந்த சிங்கம் என்ன நினைத்ததோ தெரியவில்லை அப்படியே திரும்பி சென்றுள்ளது. இதனால் அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.  ஒருவேளை சிங்கம் சீறிபாய்ந்திருந்தால் அந்த வாலிபர் நிலைமை என்ன ஆயிருக்கும்? என்பதை நினைத்து பார்க்கவே அச்சம் ஏற்படுகிறது. தற்போது இந்த வாலிபரன் செயலுக்கு இணையவாசிகள் கண்டம் தெரிவித்து வருகிறார்கள்.