பொதுவாகவே நம்மைச் சுற்றியுள்ள சில விஷயங்களிலும் நாம் அறியாத பல மறைமுக தகவல்கள் நிறைந்துள்ளன. ஆனால் அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை வியக்க வைத்துள்ளது. சாலை போர்டுகளில் உள்ள நிறங்களுக்கு பின்னால் ஒரு தனித்துவமான அர்த்தம் உள்ளதை ஒருவர் விளக்கி கூறுகிறார். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், பைக்கில் செல்லும் ஒரு நபர் சாலையோரத்தில் உள்ள போர்டுகளில் இரண்டு விதமான நிறங்களில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதை பார்க்கிறார்.
இதுகுறித்து ஆர்வமாக இணையத்தில் தேடிய போது, பச்சை நிறம் நெடுஞ்சாலை வழித்தடங்களை குறிக்கின்றது என்பதும், பிரவுன் நிறம் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தளங்களை குறிக்கிறது என்பதையும் அந்த நபர் அறிகிறார். அவர் செல்லும் பாதையில் உள்ள போர்டில் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்கள் பிரவுன் நிறத்தில் இருந்தன. இது பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் பாரம்பரிய தளங்கள் ஆகியவற்றுக்கு சிறப்புடைய பகுதிகள் என்பதால் அந்த நிறம் பொருத்தமாக இருந்தது. அதனைப் போலவே சுசீந்திரம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்கள் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. அவை முக்கிய வழித்தடங்கள் என்பதையும் அந்த நபர் விளக்கி கூறியுள்ளார். இந்த சுவாரசியமான தகவல் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய…
தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம், தற்போது அரசியல் மற்றும் நிர்வாக…
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால்,…
தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…