வெற்றி ஒரு விருப்பமல்ல, அது அவசியம்.. சலூனை வைத்து சாதித்தாரா RJ பாலாஜி..? ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முழு விமர்சனம்..

By Archana

Updated on:

நடிகர் RJ பாலாஜி நடிப்பில் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐ சரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இதுவரை காமெடி சார்ந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வந்த RJ பாலாஜி இந்த முறை கமர்சியல் களத்தை கையில் எடுத்துள்ளார். எனக்கு காமெடியை விட கமர்சியலும் செண்டிமெண்டும் நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் ஆர். ஜே. பாலாஜி.

222768 ssl

இனி முன்னணி இயக்குனர்கள் RJ பாலாஜியை காமெடிக்கும் இரண்டாவது நாயகனாக பயன்படுத்துவதற்கு மாற்றாக இனி தைரியமாக ஹீரோவாக ஆர். ஜே. பாலாஜியை நம்பி படம் எடுக்கலாம் என்பதை சிங்கப்பூர் சொல்லும் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளார் ஆர். ஜே. பாலாஜி ஏற்கனவே மண்டேலா படத்தின் மூலம் முடித்திருத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கையை படமாக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் போல் இயக்குனர் கோகுல் முடிதிருத்தும் தொழிலாளர்களின் கதையை கையாண்டு உள்ளார்.

   

தனது ஊரில் வழக்கமாக தனக்கு முடித்திருக்கும் கடையை பார்த்து தானும் அது போல் சிறந்த ஹேர் ஸ்டைலிஷ் ஆக வரவேண்டும் என்று நினைக்கிறார் ஹீரோவான ஆர். ஜே. பாலாஜி. தனது படிப்பை முடித்த பின் வேறு எந்த தொழிலும் செய்யாமல் முடிதிருத்தும் தொழிலையே தனது கனவுத் தொழிலாக நினைத்து சிங்கப்பூர் சலூன் என்ற பியூட்டி பார்லரை ஆரம்பிக்கிறார் அவர்.

IMAGE 1705672057 1

தனது கனவு சலூனை திறக்கும் போது ஏற்படுகிற சிக்கல்களும், கார்ப்பரேட் அரசியலையும் முன்னிறுத்தி இப்படத்தை எடுத்துள்ளனர். படத்தில் கேமியோ ரோலில் வரும் அரவிந்த்சாமி, ஜீவா, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இப்படத்திற்கு கூடுதல் விளம்பரத்தையும், பலத்தையும் கொடுத்துள்ளனர். நாயகியாக மீனாட்சி சவுத்ரி (தி கோட் ஹீரோயின்)மற்றும் சத்தியராஜ் தனது வழக்கமான ட்ரேட் மார்க் நடிப்பையும் வழங்கி உள்ளனர். மேலும் ஜான் விஜய், லால், ரோபோ சங்கர் தலைவாசல் விஜய் போன்றோரும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

ezgif 5 7b9ce8e2d8 1

முதல் பாதியில் காமெடி கலாட்டாவாக நகரும் சிங்கப்பூர் சலூன் இரண்டாம் பாதியில் எமோஷனலாக செல்கிறது. படத்தின் பெரிய பலமே காமெடி காட்சிகள் தான் என படம் பார்த்தோரின் கருத்தாக உள்ளது குறிப்பாக சத்யராஜ் வரும் அனைத்து காட்சிகளும் தியேட்டரில் சிரிப்பு வெடியாகத்தான் இருக்கிறது. கேப்டன் மில்லர், அயலான் என பொங்கல் பொங்கல் ஸ்பெஷல் பார்த்தவர்களுக்கு சிங்கப்பூர் சலூன் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கிறது. சின்ன சின்ன மைனஸ் பாயிண்டுகள், ஆங்காங்கே லாஜிக் மிஸ்ஸிங் என அதையெல்லாம் பார்க்காமல் ஒரு கமர்ஷியல் காமெடி திரைப்படமாக இரண்டரை மணி நேரம் பொழுது போகக்கூடிய மெட்டீரியல் ஆக சிங்கப்பூர் சலூன் உள்ளது.

singapore saloon trailer rj balaji sathyaraj lal kishen das gokul lokesh kanagaraj jiiva 1705558075

இயக்குனர் கோகுல் இதற்கு முன் தான் எடுத்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை ஒப்பிடும்போது அந்தப் படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் பார்த்தால் நம் வயிற்றை பதம் பார்க்கும். ஆனால் சிங்கப்பூர் சலூன் அதை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை. விவேக் மெரின் இசையில் பாடல்கள் ஓகே ரக மாக உள்ளது. மொத்தத்தில் நயன்தாராவின் அன்னபூரணி படம் பார்த்தவர்களுக்கு அதன் Male version ஆக சிங்கப்பூர் சலூன் அமைந்துள்ளது.
சிங்கப்பூர் சலூன் : நல்ல வேளை டிக்கெட் காசுக்கு மொட்டையடிக்கவில்லை. ரேட்டிங் : 7/10.

author avatar
Archana