பிரபல நடிகரின் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் தேவா..? வித்தியாசமான காம்போவுக்கு காத்திருக்கும் தேனிசை தென்றலின் ரசிகர்கள்..

By Archana

Updated on:

தேனிசைத் தென்றால் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் இசையமைப்பாளர் தேவா. 1980களின் மத்தியிலிருந்து 2012 வரை பரபரப்பாகவும் புகழ் உச்சியிலும் இருந்தவர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் புதிய படங்கள், லைவ்-இன் கான்சர்ட்கள் என பரபரப்பாகியுள்ளார். தமிழ் சினிமாவில் கானா பாடல்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து துள்ளல் போட வைத்தவர் என்றால் அது தேவா தான்.

deva 2778

அது எந்தளவுக்கு இருக்கும் என்றால், காதல் தோல்வி பாடல்களுக்கு கூட நம்மால் நடனமாடாமல் இருக்க முடியாது. அந்த அளவு கானா பாடல்களை அள்ளித் தந்தவர். கண்ணெதிரே தோன்றினாள், குஷி, வாலி, நினைத்தேன் வந்தாய், பொற்காலம், ஆசை, காதல் கோட்டை, தேவா, ஏழையின் சிரிப்பில், முகவரி, ப்ரியமுடன், சூரியன், நினைவிருக்கும் வரை படங்களின் பாடல்கள் எல்லாம் என்றைக்குமே அலுக்காது.

   
Profile1 2023 09 04T132531253

நடிகர் விஜய்யின் ஆரம்ப காலத்தில், அவரது பல படங்களுக்கு இசையமைத்து வந்தார் தேவா. அதேப்போல அஜித்தின் வான்மதி, வாலி, ஆசை, காதல் கோட்டை போன்ற படங்களுக்கு தேவா தான் இசை. தேவாவிடம் இசையை வாங்கத் தெரிந்தால் “இது தேவா இசையா?!” என்று குழம்பும் அளவுக்கு இசையமைத்துக் கலக்குவாராம். பழைய நினைவுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், தேவா பாடல்களைக் கேட்டாலே போதும் பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் அடித்த லூட்டிகள் கண்முன்னே வந்து செல்லும். இப்படி இசையில் பட்டையை கிளப்பி வந்தவர் சில காலம் ஓய்வெடுத்து வந்தார்.

202010130041591550 Only I know the struggle I am going through Yogi Babu SECVPF

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைத்துறை பக்கம் வந்திருக்கும் தேவா, கர்ணன் படத்தில் மஞ்சனத்தி, மாமன்னன் படத்தில் நெஞ்சமே, நெஞ்சமே போன்ற பாடல்களை பாடி, இக்காலத்து ரசிகர்களையும் தன்வசப்படுத்தியுள்ளார். சமீபத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் இசை. திரைக்கு மீண்டும் வந்தாச்சு.. மறுபடியும் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தால் என்ன என்று எண்ணியவருக்கு, கௌதம் ராமச்சந்திரன் வாய்ப்பு கொடுத்திருக்கிறாம்.

கௌதம் ராமச்சந்திரன் சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கே படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவர் அடுத்ததாக தயாரிக்கும் ஒரு படத்தில் தேவா இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளாராம். இப்படத்தை கௌதமின் நண்பர் ஷாம் இயக்கும் இப்படத்தில், யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
Archana