தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் தான் ரியாஸ் தான். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமாரியாஸ் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அவர்களின் மூத்த மகனான சாரிக் ஹாசன் தற்போது சினிமா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். இவர் பென்சில், டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போதும் இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் ஷாரிக் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில் காதலை பெற்றோரிடம் சொல்லி இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடந்தது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு ஷாரிக் தனது மனைவி மரியாவுடன் இணைந்த முதல் முறையாக யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.அதில் பேசிய மரியா, எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார்.

நான் சிங்கிள் மதர் ஆக தான் கஷ்டப்பட்டு என் மகளை வளர்த்து வந்தேன். இதனால் எனக்கு என் மகள் தான் முக்கியமாக தெரிந்தது. அதனால் இரண்டாவது திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. வருபவர் என்னை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் என் மகளை எப்படி ஏற்றுக் கொள்வாரா என எனக்கு தெரியவில்லை. இதனால் நிறைய பயந்தேன். ஆனால் என் மகளை ஷாரிக் அவருடைய மகளாகவே நன்றாக பார்த்துக் கொண்டார். அதைப் பார்த்து தான் எனக்கு அவர் மீது காதலே வந்தது. எனக்கு நல்ல கணவரை விட என் மகளுக்கு அவர் ஒரு நல்ல அப்பாவாக இருக்கிறார். எனக்கு எப்படி என் மகளை ஏத்துப்பாங்க என்ற பயம் இருந்தது.

ஆனா அவங்க என் மகள் ஜாராவை அவங்களோட பேத்தி ஆகவே ஏத்துக்கிட்டாங்க. எங்க ஷாப்பிங் போனாலும் அவளையும் கூட தான் கூட்டிட்டு போறாங்க. அங்கிள் ஷூட்டிங்கில் இருந்தாலும் என் பேத்தி ஸ்கூலுக்கு போயிட்டாளா வந்துட்டாளா என விசாரிச்சுக்கிட்டே இருப்பாரு. அதேசமயம் சாரிக் என்கிட்ட சொன்னாரு, இத்தனை வருஷமா நீ அவளை கஷ்டப்பட்டு வளத்துட்ட இனிமே அவளை நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னாரு.

என் மனசுல இப்ப எந்த பயமும் இல்லை. இப்போ நான் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன் என்று மரியா பேசியுள்ளார். இவர் இவ்வாறு பேசியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஷாருக் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா என்று இணையத்தில் ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

