நான் புதுமுக இயக்குனர்களோடு பணியாற்றுவதில் உள்ள சுயநலம்… சக்ஸஸ் சீக்ரெட்டைப் பகிர்ந்த ஜெயம் ரவி!

By vinoth on அக்டோபர் 24, 2024

Spread the love

இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் மினிமம் கியாரண்டி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் ஜெயம் ரவி.தனது அண்ணன் இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவரது தந்தை மோகன் பிரபல எடிட்டர் ஆவார். அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் ஆவார். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களான உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

கடைசியாக இவர்கள் கூட்டணியில் உருவான  தனி ஒருவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விரைவில் தனி ஒருவன் 2 திரைப்படமும் உருவாக உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகிழ்ச்சியாக நட்சத்திர தம்பதிகளாக சென்றுகொண்டிருந்த இவர்கள் சமீபத்தில் விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர்.

   

ஜெயம் ரவி, கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் கூட அவரின் தனிப்பட்ட வெற்றி என்று சொல்ல முடியாது. விவாகரத்துக்குப் பின்னர் இப்போது ஜெயம் ரவி மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மீண்டும் தன்னுடைய வெற்றிப் பாதைக்கு திரும்ப ஆர்வமாக உள்ளார்.

   

#image_title

 

அவர் நடிப்பில் பிரதர் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் திரைப்பட வாழ்க்கையில் அதிகளவில் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்தது பற்றிய சீக்ரெட்டை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் “நான் புதிய இயக்குனர்களை நம்பி அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்ததில் ஒரு சுயநலமும் உள்ளது. ஏனென்றால் அவர்கள்  ஒரு கதையைக் குறைந்தது இரண்டு வருடமாவது செதுக்குவார்கள். நான் அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு இருக்கிறதா என்று மட்டும்தான் பார்ப்பேன்.

பிரதீப் என்னிடம் கோமாளி கதையை சொன்னபோது கூட நான் அவரை ஒரு சீனை எடுத்துக் காட்ட முடியுமா என்றுதான் கேட்டேன். அவன் சரியாக எடுத்து வந்து கொடுத்தேன். அதில் சவுண்ட், கேமரா கோணம் எல்லாமே சரியாக இருந்தது. அதனால் நான் அவன் ஷூட் செய்யும்போது எந்த தொந்தரவும் செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.