முருங்கையை வைத்திருப்பவன் வெறுங்கையுடன் போவான்என்று கூறுவார்கள். இது மிக பிரபலமான ஒரு பழமொழி தான். ஒரே வார்த்தையில் முருங்கையின் மருத்துவ குணத்தை இது கூறுகிறது. ஆனால் பலர் இதை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். முருங்கையின் மருத்துவ குணத்தினால் நாம் தடி இல்லாமல் வெறுங்கையுடன் ஆரோக்கியமாக நடந்து போவான் என்பது தான் அதன் அர்த்தம். அது எவ்வளவு நமக்கு பயன்படுகிறது அதில் மருத்துவ குணங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.
ஒரு வீட்டில் முருங்கை மரத்தை வளர்க்கும் பொழுது அந்த முருங்கையில் இருக்கும் இலை பூ காய் பிஞ்சு பிசின் பட்டை வேர் என அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகின்றன. எங்குமே தாராளமாக கிடைப்பதால் இந்த முருங்கைக் கீரை கிடைப்பதால் அதன் மகத்துவம் நமக்கு தெரிவதில்லை. கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரம் வைத்திருப்பார்கள். ஏனென்றால் வீட்டில் மரம் இருக்கும் போது அவ்வப்போது அதில் இருக்கும் இலை காய்களை பறித்து சமைப்பதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இந்த நோக்கில் தான் மரங்களை வளர்த்தார்கள். தற்போதைய நகர வாழ்க்கையில் முருங்கை மரத்தை வளர்ப்பது கடினம் ஆனால் நமக்கு சீசன் நேரத்தில் முருங்கை காயிகளும் வருடம் முழுவதும் முருங்கைக்கீரைகளும் நமக்கு கிடைக்க தான் செய்கிறது.
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் அதில் அவ்வளவு இரும்புச்சத்து இருக்கிறது. முருங்கைக் கீரைக்கு கண் நோய்களை போக்கும் தன்மை இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடால் ஏற்படும் நோயினால் அவதிப்படுபவர்கள் முருங்கைக்கீரை அதிகமாக சேர்த்து வந்தால் உடல் ஊட்டம் பெறும். பல்வேறு நாடுகளிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் முருங்கை இலைகள் ரத்தசோகை நோயை குணப்படுத்த பயன்படுத்த படுகிறது. நீங்கள் முருங்கைக்கீரை பொரியலாக சாப்பிட கஷ்டமாக இருக்கிறது என்றால் சூப் மாதிரியும் வைத்து குடிக்கலாம்.
அதேபோல் நீங்கள் முருங்கை சூப் அல்லது பொரியல் செய்யும்போது முருங்கைக் கீரையுடன் அதன் பூக்களையும் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அது இன்னும் கூடுதல் பலனை நமக்குத் தரும். முருங்கைக்காய் சாம்பாருக்கு பயன்படும் அதுவும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்றுதான். குறிப்பாக ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்க இது உதவுவதாக கூறப்படுகிறது.
முருங்கை மரங்களிலிருந்து ஒரு கருஞ்சிவப்பு நிறத்தில் வடியும் ஒரு பசை போன்றது தான் முருங்கை பிசின். நம் முன்னோர்கள் காதில் உண்டாகும் புண்னை குணப்படுத்த முருங்கை பிசினை பயன்படுத்தி இருக்கிறார்கள். தேங்காய் எண்ணெயில் இந்த முருங்கை பிசினை குழைத்து புண்களில் தடவினால் சரியாகும். இது தவிர உடலில் ஏற்படும் சிறிய வீக்கங்களுக்கு முருங்கை இலையை அல்லது பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கத்தில் பத்து போடும் போது வீக்கம் உடனே கரைந்து விடும் என்று கூறுகிறார்கள். மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் முருங்கை வேரை அரைத்து உப்பு சேர்த்து மூட்டுகளில் பத்து போட்டால் மூட்டு வலி வீக்கங்கள் காணாமல் போய்விடும்.
முருங்கையில் அதிகப்படியான இரும்பு சத்துக்கள் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அப்பேர்ப்பட்ட இந்த அபாரமான மருத்துவ குணங்களை கொண்டது முருங்கை மரம் சார்ந்த பொருட்கள். வாரத்தில் ஒரு முறை ஏனும் கட்டாயம் முருங்கைக் கீரையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்தனை மருத்துவ குணம் கொண்டதால் தான் கிராமங்களில் முருங்கையை வளர்த்து வருகின்றனர். இனி எப்போவாவது நீங்கள் முருங்கைக் கீரையை பார்த்தால் கட்டாயம் வாங்கி வந்து சமைத்து சாப்பிடுங்கள்.