விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசர்களை கடந்துள்ள நிலையில் தற்போது எட்டாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை தற்போது இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ளது. இதில் மக்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். போட்டியாளர்கள் உள்ளே வந்த சில மணி நேரத்திலேயே ஆட்டமும் தொடங்கிவிட்டது. இந்த முறை ஒரே வீட்டில் ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடுகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் மகாராஜா பட நடிகை சாச்சனா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் அவர் உள்ளே வந்தார். இதனைத் தொடர்ந்து முதல் வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அர்னவ் வெளியேறினார். தற்போது நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவருக்கும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆண் போட்டியாளர்கள் Receptionist ஆக உள்ள நிலையில் பெண்கள் ரூம் சர்வீஸ் செய்கின்றனர். அப்போது போட்டியாளர் ஆர் ஜே ஆனந்தி எழுந்து நின்று, முத்துக்குமார் செய்தது சரியில்லை என்று கூறுகிறார். அதற்கு பதில் அளித்து பேசிய முத்துக்குமார் ஆனந்தியை காயப்படுத்தும் வகையில் பேசுகிறார். இதனால் ஆனந்தி அழுது கொண்டே உங்க கூட பேச எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிட்டு போகிறார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.