நான் கவர்ச்சியா நடிக்காததற்கு காரணம் இதுதான்.. நச்சுனு பதில் சொல்லி ரசிகர்களை வியக்கவைத்த நடிகை சாய் பல்லவி..!

By Nanthini on அக்டோபர் 24, 2024

Spread the love

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. தன்னுடைய இயற்கையான அழகு, பேசும் கன்னங்கள் மற்றும் மற்றவர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் புன்னகை என ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக இருந்து வருகிறார். மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

   

இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ராஜ்குமார் சார் அமரன் ஸ்கிரிப்ட் என்கிட்ட கொண்டு வந்து கொடுத்தாரு. அப்போ நான் அவர்கிட்ட என்ன இவ்ளோ சிம்பிளான ரோல் கொண்டு வந்து என்கிட்ட கொடுக்குறீங்க என்று கேட்டேன். அப்போ அவரை நீங்க ஃபர்ஸ்ட் முகுந்தனோட மனைவியை மீட் பண்ணுங்க அதுக்கப்புறம் இந்த ஸ்கிரிப்ட் படிங்க என்று என்கிட்ட சொன்னார். நான் உங்களை மீட் பண்ண பிறகு தான் எனக்கு எல்லாமே புடிச்சு போயி இந்த படத்துக்கு ஓகே சொன்னேன். நான் சோசியல் மீடியா இல்லாத காலத்தில் சினிமாவில் நுழைந்தேன்.

   

 

அப்போ எல்லாம் நம்ம ஏதாவது பண்ணா அது டிவில மட்டும் தான் வரும். முதலில் நான் அழகா இல்லையா என்ற மாதிரி தான் எனக்கு பீல் ஆச்சு. எங்க அம்மா எப்பவுமே என்ன நீ ரொம்ப அழகு பல்லவி என்று சொல்லிகிட்டே இருப்பாங்க. பிரேமம் படம் வந்த பிறகு எல்லோரும் மலர் கேரக்டரை ஏத்துக்கிட்டதுக்கு பிறகு தான் கேரக்டர் அழகா இருந்ததுன்னா போதும் அதுதான் அழகு என்று புரிந்து கொண்டேன். நான் சினிமாவை பொருத்தவரையில் துணிகளை இப்படித்தான் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வரவில்லை. ஆனால் பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு ஒருமுறை என்னுடைய டான்ஸ் வீடியோ வெளியானது. அந்த டான்ஸ்க்கு ஏற்ற உடை தான் நான் அணிந்திருந்தேன்.

அப்போ அழகாய் இருந்த அந்த டான்ஸை ஒரு மாதிரி காட்டி விமர்சனம் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்போ எனக்கு ஒரு மாதிரியா இருந்தது. இந்த மாதிரி நம்ம அப்பா அம்மா நம்பள பாக்கலையே என்று எனக்கு தோணுச்சு. இனிமே இப்படி செய்யக்கூடாது என்று அப்போ நான் முடிவு பண்ண. நான் ஒன்னும் சதை பிண்டம் கிடையாது. என் உடலை காட்டி நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நான் இப்போது இருக்கும் லுக்கிலையே என் ரசிகர்கள் என் மீது அன்பை பொழிகிறார்கள். அதனாலயே அதையே ஏன் பாலோ செய்யக்கூடாது என்று அதே பாதையில் தொடர்கிறேன். நான் எடுத்த முடிவால் எனக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நாள் தான் வாய்ப்புகள் குறைகிறது என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. என் நடிப்பு திறமையை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள் படங்களில் மட்டுமே நடித்துவிட்டு செல்வேன் என்று சாய் பல்லவி பதிலளித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளார்.

author avatar
Nanthini