சுவை மற்றும் எளிதான தயாரிப்பு காரணமாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே பாஸ்தா மிகவும் விரும்பப்படும் உணவாக மாறியுள்ளது. இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட மைதாவால் செய்யப்படும் பாஸ்தாவை அடிக்கடி உட்கொள்வது உடலுக்குப் பல தீவிர உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதில் அதிகளவில் உள்ள மாவுச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தி நீரிழிவு நோய்க்கும், அதில் சேர்க்கப்படும் சீஸ் மற்றும் கிரீம் போன்ற பொருட்கள் கெட்ட கொழுப்பை அதிகரித்து இளம் வயதிலேயே உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கும் வழிவகுக்கின்றன.
மேலும், கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பாஸ்தாவில் சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிகப்படியான சோடியம் மற்றும் ரசாயனங்கள் ரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும். நார்ச்சத்து இல்லாத மைதாவால் தயாரிக்கப்படுவதால் இது குடலில் ஒட்டிக்கொண்டு செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்காத பாஸ்தாவைத் தவிர்க்க இயலாத பட்சத்தில், முழு கோதுமையால் செய்யப்பட்ட பாஸ்தாவை அதிகக் காய்கறிகளுடன் சேர்த்து வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
