விண்வெளி ஆய்வில் ரிஸ்க்…! “திரும்பி வராதுன்னு தெரிஞ்சும் துணிச்சல்…” ஆபத்தான பிளாக் ஹோல்…. விஞ்ஞானிகள் மாஸ் பிளான்…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

பிரபஞ்சத்தின் மிகவும் புதிரான மற்றும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படும் பிளாக் ஹோல் குறித்த ஆய்வில் இறங்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சீனாவில் உள்ள புடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் இயற்பியலாளர் கோசிமோ பாம்பியும் அவரது குழுவினரும், பிளாக் ஹோலின் ‘இவென்ட் ஹொரைசன்’ என்ற ஈர்ப்பு எல்லைக்கு மிக அருகில் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‘பொதுச் சார்பியல் கோட்பாட்டை’ சோதித்து, விண்வெளி-காலம் மற்றும் ஈர்ப்பு புலத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முயன்று வருகின்றனர்.

பிளாக் ஹோலின் ஈர்ப்பு எல்லையைக் கடந்துவிட்டால் எந்தவொரு விண்கலமும் மீண்டும் பூமிக்குத் திரும்ப முடியாது என்பதால், அதன் எல்லைக்கு மிக அருகில் தரவுகளைச் சேகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். வழக்கமான ராக்கெட்டுகள் மூலம் பல ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பிளாக் ஹோலை அடைவது கடினம் என்பதால், சக்திவாய்ந்த லேசர் கற்றைகள் மூலம் இயங்கும் ‘நானோகிராஃப்ட்’ எனும் சிறிய லேசான விண்கலங்களைப் பயன்படுத்த நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர். எதிர்காலத்தில் பூமிக்குச் சற்று அருகில் உள்ள பிளாக் ஹோல்கள் கண்டறியப்படும் போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.