அவ்வளவு பெரிய மனுஷனுக்குள்ள இருந்த மனித தன்மை.. 14 வருடங்களுக்கு முன்பே டாடாவை புகழ்ந்து பேசிய வாலி..!

By Nanthini on ஐப்பசி 26, 2024

Spread the love

தமிழ் திரை உலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கவிதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தகராகத்தான் திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். வடை மாலை என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கியிருந்தார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை ஐந்து முறை பெற்ற பெருமைக்குரியவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு செல்ல எத்தனையோ அழைப்பு வந்தும் வாலி செல்லவில்லை. இப்படி பல புகழுக்குரிய வாலி 2013 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

   

அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றன. இந்த நிலையில் வாலி பேசிய ஒரு பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அது வாலி ரத்தம் டாடா பற்றி பேசிய வீடியோ தான். அதில், மனிதத் தன்மை மனித நேயம் எவ்வளவு பெரிய ஆட்களுக்கு எல்லாம் இருக்கிறது என்பதை சொல்வதற்காக இதை சொல்ல வருகிறேன் என்று சொல்லிவிட்டு பேசுகிறார். ஒரு நாள் பயங்கரமான இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. நான் சௌபாத்தி பீச் வழியாக நடந்து வருகிறேன்.

   

அவ்ளோ பெரிய பணக்காரருக்கு உள்ளே இருந்த மனித தன்மை அது.. கவிஞர் வாலியை  அன்பால் நனைய வைத்த ரத்தன் டாடா.. வீடியோ வைரல்

 

அப்படி நான் மழையில் நனைந்து வரும்போது ஒரு சின்ன கார் என் பக்கத்தில் வந்து நின்றது. கொட்டும் மழையில் அந்த காரில் இருந்து கண்ணாடியை ஒரு ஆள் இறக்கி ‘யெங் பாய் நீ எங்க போற, வா கொண்டு போய் இறக்கி விடுற’என்றார். இல்ல நான் VT ஸ்டேஷன் போகணும் என்று சொன்னதும் come on Get in என்று சொன்னார். நான் ஏறி உட்கார்ந்தேன். அவர் என்னை நான் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விட்டார்.

Ratan Tata: ரத்தன் டாடா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.. :  ரத்தன் டாடா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.. | Times Now Tamil

உடனே நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உங்களுடைய பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா என கேட்டேன். மக்கள் எல்லோரும் என்னை டாடா என அழைப்பார்கள் என்றார். அவ்வளவு பெரிய பணக்காரருக்கு உள்ளே உள்ள மனிதத்தன்மை தான் அது. மிகச்சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனிதர்தான் ரத்தன் டாடா என அப்பவே வாலி புகழ்ந்துள்ளார். ரத்தம் டாடா சமீபத்தில் மறைந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.