என் அப்பா பற்றி இதுவரை வெளியே பேசாததற்கான காரணம் இது தான்… முதல் முறையாக மனம் திறந்த ஏ.ஆர் ரகுமான்..!

By Nanthini on ஐப்பசி 26, 2024

Spread the love

உலக அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசை அமைப்பாளர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உண்டான இவர் தனது 15 வயதிலேயே பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு பல இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். பிறகு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ ஆர் ரகுமான் முதன்முதலாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான யோதா என்ற திரைப்படம் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு தமிழில் ரோஜா படம் வெளியானதால் அதுவே அவருடைய முதல் படமாக மாறியது.

   

தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ஏ ஆர் ரகுமானும் கொண்டாடப்பட்டார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசை திறமைக்காக தேசிய விருது மற்றும் ஃபிலிம் ஃபேர் விருது தொடங்கி ஆஸ்கார் மற்றும் கிராமிய விருதுகளையும் சர்வதேச அளவில் மற்றும் தனக்கான அங்கீகாரத்தையும் பல இடங்களில் ஏ ஆர் ரகுமான் தடம் பதித்துள்ளார்.

   

ஏ ஆர் ரஹ்மானின் உண்மையான பெயர் என்ன தெரியுமா.? இஸ்லாம் மதத்திற்கு மாறிய  முக்கிய காரணம் - Cinemapettai

 

திரைத் துறையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் மற்றும் கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவருடைய இசைக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் தனது இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். கடந்த ஆண்டு லால் சலாம், பொன்னியின் செல்வன் மற்றும் அயலான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தார். தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

ஏ.ஆர்.ரகுமானின் அப்பா யார் தெரியுமா? | Do you know who AR Rahman father is?  | Tamil Valaikkatchi

இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் அப்பாவை பற்றி இதுவரை ஏன் பேசியதில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், என் அப்பாவுடைய மரணம் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. ஒரு இருள் போல இருந்தது. அதனால்தான் அவரைப் பற்றி நான் அதிகம் பேசவில்லை. அப்பா தன்னுடைய கடைசி காலத்தில் ரொம்பவே கஷ்டத்தை அனுபவித்தார். என்னுடைய தந்தையிடமிருந்து தான் கருணை, தாராள மனப்பான்மை, ஊக்கம் மற்றும் விவேகம் போன்ற எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன் என ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார்.