இயக்குநர்களை திருமணம் செஞ்சி…. இன்றுவரை சந்தோசமாக வாழும் நடிகைகள்…. இதோ மொத்த லிஸ்ட்…!!

By Soundarya on ஐப்பசி 26, 2024

Spread the love

இயக்குனர்களை திருமணம் செய்து, தற்போது வரை ஒன்றாக வாழ்ந்து வரும் பிரபல நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

#image_title

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் முன்னணி நடிகையான தேவயானி. இவரின் அழகிய முகம் மற்றும் கொஞ்சி பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் பலரின் மனதையும் கொள்ளையடித்த பெயர் இவருக்கு உண்டு. பெங்காலி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

   
   

 

 

#image_title

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிப்பதும் படங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இவர் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர்.சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

#image_title

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஷாருஹாசனின் மகள் சுஹாசினி. இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார்.

#image_title

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

#image_title

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ. இவர் 1950 ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனை தொடர்ந்து 1990களில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்தார். இதற்கிடையில் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

#image_title

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய்  மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.