அண்மையில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சட்டவிரோத பணப்பட்டுவாடாவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ரூ.500 நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விடுவதைக் குறைக்க வங்கிகளுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, வங்கி கிளைகளில் ஒரு நாளைக்கு ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் 500 ரூபாய் தாள்களைக் கட்டுகளாக வழங்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பணப்புழக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில், ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை வழங்குவதில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், வங்கிப் பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…