இரட்டைக்குழந்தைகளுடன் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை நமீதாவை மீட்ட மீட்புக் குழுவினர்… வைரலாகும் வீடியோ…

By Begam on டிசம்பர் 7, 2023

Spread the love

சென்னையில் மிக்ஸாம் புயலின் தாக்கத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். மழை நீரால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் சூழப்பட்டுள்ளது. தற்பொழுது மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

   

அரசு இப்பணிகளை முழு வீச்சில் நடத்தி வருகிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் தற்பொழுது வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மக்கள் அனைவருக்கும் உணவு ,குடிநீர் போன்றவற்றை தற்போது அரசு வழங்கி வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டும் வருகின்றனர்.

   

 

இந்நிலையில் நடிகை நமீதா துரைப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார். மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்க சென்றனர். அப்பொழுதுதான் நடிகை நமிதா தனது குடும்பத்துடன் குழந்தைகளுடன் வெள்ளத்தில் சிக்கி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.  இந்த பகுதியில் இதுபோன்ற பல்வேறு குடும்பங்களை மீட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ…