BIG NEWS: கனமழை எதிரொலி: “இன்று நடைபெறாது” தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

By Soundarya on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெற இருந்த மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள், தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அக்.24 ஆம் தேதி முதல் அக்.29 ஆம் தேதி வரை நடைபெற இருந்த தடகள போட்டிகளில் தமிழகம்  முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கவிருந்தனர். இதனால், பாதுகாப்பு கருதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், போட்டிகளுக்கான தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.