தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இது, வட தமிழகம் தெற்கு ஆந்திரா இடையே கரையை நோக்கி நகரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்புகள் குறைவு எனவும், அதேநேரம் நிலப்பகுதிக்கு அருகே உள்ளதால் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
