அடிஆத்தி எம்புட்டு பெருசு…! கரையில் ஒதுங்கிய 40 டன் எடைகொண்ட திமிங்கிலம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஐப்பசி 22, 2025

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் ஒரு பெரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிகப்பெரிய கடல்  உயிரினத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடற்கரைக்கு அருகில் மீன்பிடிக்கச் சென்ற சில இளைஞர்கள் இந்த திமிங்கலத்தைக் கண்டனர். அவர்கள் இந்த சம்பவத்தை படமாக்கி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக்கினர்.

மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள், பலத்த கடல் அலைகளால் கரைக்குக் கொண்டுவரப்பட்ட பெரிய திமிங்கலத்தின் சடலத்தைக் கவனித்தனர். கிட்டத்தட்ட 40 டன் எடை கொண்ட இந்த திமிங்கலம், சுமார் 25 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடற்கரையில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதானவை என்பதால், இவ்வளவு பெரிய உயிரினத்தை அருகிலிருந்து பார்த்ததில் உள்ளூர்வாசிகள் ஆச்சரியப்பட்டனர்.