கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லை. இதனையடுத்து அதே சமயத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் உள்ள ஒரு சர்ச்சுக்கு சென்றுள்ளார். அங்கு சபை போதகரமான ரெஜிமோன்(43) என்பவர் இருந்துள்ளார்.
அவர் இளம் பெண்ணின் நோய் குணமாக தனிமை ஜபம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை நம்பிய பெற்றோரும் மகளை மட்டும் ஜெபம் செய்யும்படி அறைக்குள் அனுப்பி இருக்கிறார்கள். அப்போது மதபோதகர் அப்பெண்ணின் அழகில் மயங்கி ஜெபம் செய்வதை மறந்தார். அந்த பெண்ணை திடீரென்று கட்டிப்பிடித்து ள்ளார். இதனையடுத்து ஆபத்தை உணர்ந்த அந்தப் பெண் அவருடைய பிடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடி வந்து பிறகு நடந்ததை கூற பெற்றோர்கள் முறைப்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரெஜிமோகனை கைது செய்தார்கள்.
