இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியல்களை விஜய் , சன் என ஏராளமான டிவி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகிறது. இதில் சன் டிவி தான் எப்பொழுதும் டிஆர்பி யில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது விஜய் டிவியும் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சியாகவே மாறிவிட்டது. இதற்கு காரணம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த சீரியல்கள் இதில் உள்ளது. பாக்கியலட்சுமி, மகாநதி, சின்ன மருமகள் என அனைத்து சீரியல்களுமே விஜய் டிவியில் பேமஸ் ஆகிவிட்டது என்று சொல்லலாம். உணர்ச்சிபூர்வமான சம்பவம், நம்ம ஊரு கலாச்சாரம், அசல் தமிழ் பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் சீரியல்தான் விஜய் டிவியின் உண்மையான வெற்றிக்கு காரணம் என்றே சொல்லலாம்.
பெரும்பாலும் ஒரு சீரியல் முடிவுக்கு வந்தால் மீண்டும் இன்னொரு சீரியல் அடுத்த நாளே களமிறக்கி விடுகிறது விஜய் டிவி. இந்த நிலையில் தற்போது “மகளே என் மருமகளே” என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் உதயமாக உள்ளது. அதாவது “தன்னுடைய மகனை இழந்த தாய் மகனை நினைத்து தவிக்கும் நொடி தன்னுடைய மருமகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தாங்கும் காட்சி. என்னுடைய மருமகளை நான் இங்கே அனுப்ப மாட்டேன்” என்று கூறும் ஒரு பாச போராட்டம். இப்படித்தான் அந்த சீரியலுடைய புரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்தாலே நிச்சயம் அந்த சீரியல் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
