உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? பாட்டியை மரத்தில் கட்டி வைத்து சித்தரவதை செய்த உறவினர்கள்…. கண்ணெதிரே நடந்த அராஜகம்…!!

By Devi Ramu on தை 6, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறு காரணமாக 70 வயது மூதாட்டி மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்ணாமலை என்ற அந்த மூதாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள பூர்வீக நிலத்தை உறவினர்கள் உழுவதைத் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் மற்றும் கல்பனா தம்பதியினர், மூதாட்டியை தென்னை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியதுடன், அவர் கண் முன்னே நிலத்தை அராஜகமாக உழுதுள்ளனர்.

இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்க வந்த பாஜ நிர்வாகி ஒருவரையும் அந்தக்கும்பல் கீழே தள்ளி தாக்கியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவேரிப்பட்டணம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். மூதாட்டியைத் தாக்கிய குமார், கல்பனா மற்றும் பிரபாகரன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.