திடீர் திருப்பம்… விஜய்யுடன் கூட்டணி இல்லை… சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமையலாம் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள காங்கிரஸ் மேலிடம், தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் விஜய் இடையே நடந்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உடையும் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் திமுகவை தங்களின் நம்பகமான கூட்டாளி என்றும் தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இந்த முறை திமுக விடும் அதிகப்படியான தொகுதிகளையும் ஆட்சியில் பங்கையும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றது. தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய கட்சிகள் ஆட்சியில் பங்கு தருவதாக வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் அதனை பயன்படுத்தி திமுகவிடம் கூடுதல் இடங்களை பெற காங்கிரஸ் பேரம் பேசும் என்று தெரிகிறது. எது எப்படியாக இருந்தாலும் 2026 தேர்தலிலும் திமுக மற்றும் காங்கிரஸ் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.