தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில்… பொதுமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

பொதுவாகவே சுப முகூர்த்த தினங்கள் என்று கருதப்படும் நாட்களில் அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறுகிறது. இதனால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அதன்படி கார்த்திகை மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான நவம்பர் 27ஆம் தேதி அன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் கார்த்திகை மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவண பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் 300 டோக்கன்களும், அதிக பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களில் 150 சாதாரண டோக்கன் மற்றும் 16 தட்கல் டோக்கன்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆவண பதிவுகளை சுலபமாக மேற்கொள்ள உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.