அடுத்த பரபரப்பு… செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணையும் அதிமுகவின் முக்கிய புள்ளி… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சியினரும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக அதிமுகவிலிருந்து அடுத்தடுத்த முக்கிய புள்ளிகள் பலரும் விலகி வருவது ஈபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில்அதிமுக முன்னால் எம் பி யும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளருமான சத்தியபாமா விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி விஜய் முன்னணியில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் என பலரும் இணைய உள்ளதாக தெரிகிறது. ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.