ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு துயர சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் சுரங்கப்பாதையில் நடந்த ஒரு விபத்தில், யோகேஷ் மீனா மற்றும் அஜய் சர்மா என அடையாளம் காணப்பட்ட இரண்டு நண்பர்கள், தங்கள் பைக் ஸ்டண்ட் வீடியோக்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டனர். இந்நிலையில் சம்பவதன்று அவர்கள் அதிவேகத்தில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை முந்திச் செல்ல முயன்றபோது, அவர்களின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக வந்த கான்கிரீட் மிக்சர் டம்பிங் லாரி மீது மோதி சில நொடிகளில் அவர்களை நசுக்கியது.
இந்த கொடூரமான விபத்து முழுவதும் அவர்களின் ஹெல்மெட் பொருத்தப்பட்ட கேமராக்களில் நேரடியாகப் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளியில், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் மோதியதைக் காட்டுகிறது. பைக் சமநிலையை இழந்து கீழே விழுகிறது, மேலும் சில நொடிகளில் பின்னால் இருந்து வந்த ஒரு டம்பிங் லாரி அவர்கள் மீது மோதியதில் ஓட்டுநர்கள் நசுக்கப்படுகிறார்கள்.
जयपुर ट्रांसपोर्ट नगर टनल में हुआ हादसे के लाइव वीडियो , सबक ध्यान रखें @jaipur_police @jpr_traffic pic.twitter.com/WC9h6zkty3
— Ishant Vashistha 🐦 (@Ishantvashist) November 24, 2025
