இந்தியன் 2 படத்திற்கு ரெட் ஜெயண்ட் போட்ட கண்டிஷன்.. விழி பிதுங்கி நிற்கும் தியேட்டர் உரிமையாளர்கள்..!!

By Priya Ram on ஜூலை 22, 2024

Spread the love

பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தியன் படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது.

இந்தியன் -2 படத்தின் சிறப்புக் காட்சி: நாளை ஒருநாள் திரையிட தமிழக அரசு அனுமதி | Tamil Nadu government gives permission for special screening of 'Indian 2' movie - hindutamil.in

   

இந்த நிலையில் சங்கர் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை உலகநாயகன் கமலஹாசனை வைத்து எடுத்தார் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல சிக்கல்களை தாண்டி கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.

   

Indian 2 Review: இந்தியன் 2 விமர்சனம்.. ரசிகர்களை கதறவிட்ட ஷங்கர்.. கமல்ஹாசன் நடிப்பு எப்படி? | Kamal Haasan's Indian 2 Review in Tamil is here - Tamil Filmibeat

 

ஆனால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். படத்தின் நீளமும் அதிகமாக இருந்ததால் 12 நிமிட காட்சிகளை நீக்கிவிட்டனர். அதன் பிறகு புதிய வெர்ஷன் படம் திரையிடப்பட்டது. பல நெகடிவ் விமர்சனங்கள் வந்துள்ளது.

இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

இந்த நிலையில் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தியேட்டர் உரிமையாளர்களிடம் படம் மீது இருந்த நம்பிக்கை வைத்து இரண்டு வாரங்கள் படத்தை கண்டிப்பாக திரையரங்குகளில் ஓட்ட வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார்கள். மேலும் 55 கோடி ரூபாய் பணத்தை அட்வான்ஸ் பணமாக வாங்கியுள்ளனர். எதிர்பார்த்த அளவு வசூல் செய்யாமல் முதலுக்கு மோசமானதால், இந்தியன் 2 படத்தையும் தூக்க முடியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பட வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரெட் ஜெயண்ட்! - மின்னம்பலம்